News October 3, 2025

கணவரை மீட்க SCக்கு சென்ற சோனம் வாங்சுக் மனைவி

image

லடாக் கலவரம் தொடர்பாக கைதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, விடுவிக்க கோரி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மோதல் தொடர்பாக யாரையாவது பலிகடாவாக்க வேண்டும் என்பதற்காக போலீசார் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி <<17890675>>ஜனாதிபதி<<>>, PM-க்கு அவர் ஏற்கெனவே கடிதம் எழுதிருந்தார்.

Similar News

News October 3, 2025

கரூர் விவகாரத்தில் விஜய் செய்தது தவறு: சீமான்

image

கரூர் விவகாரத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் இருக்கா என்று திருமா கேட்டதில் உண்மை இருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வர உள்ளதாலேயே கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய்க்காகவே மக்கள் கூடிய நிலையில் உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சாடினார்.

News October 3, 2025

கரூர் துயரம்: ஒரு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கும் நிலையில், எவ்வாறு சிபிஐ-க்கு மாற்ற முடியும்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக்கூறிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தனர்.

News October 3, 2025

Sports-ல் அரசியல் வேண்டாம்: PAK Ex கேப்டன்

image

பாக்., வீராங்கனை நடாலியா பெர்வாய்ஜ் <<17900065>>Azad Kashmir<<>>-ஐ சேர்ந்தவர் என பாக்., Ex. கேப்டன் சனா மிர் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில், அப்பகுதியில் வளர்ந்ததால் நடாலியா சந்தித்த கஷ்டங்களை விளக்கவே அப்படி கூறியதாக சானா மிர் விளக்கமளித்துள்ளார். வர்ணனையாளராக சொன்ன விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறிய அவர், விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!