News April 29, 2025
இபிஎஸ் பம்மியதற்கு, மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி

மாநில உரிமையை பறிக்கும் பாஜகவுடன் சேர்ந்த EPS-க்கு 2026-ல் மக்கள் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி; கரப்ஷன் ஆட்சியை நடத்திய இபிஎஸ், அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி ஆட்சி என்ற போதே இபிஎஸ்ஸின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக சாடினார்.
Similar News
News December 28, 2025
டிசம்பர் 28: வரலாற்றில் இன்று

*1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கம் *1932 – தொழிலதிபர் திருபாய் அம்பானி பிறந்தநாள் *1937 – தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் *1947 – எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்தநாள் *1952 – அரசியல்வாதி அருண் ஜெட்லி பிறந்தநாள் *1964 – அரசியல்வாதி ஜி.கே.வாசன் பிறந்தநாள்
News December 28, 2025
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?

உள்ளூரில் NZ, SA அணிகளுக்கு எதிராக டெஸ்டில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கம்பீரை டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க BCCI ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக Ex வீரர் லட்சுமணனை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லட்சுமண் BCCI அகாடமியின் உயரிய பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த புடின்

ரஷ்யாவுடனான பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்ந்தால், தங்களது இலக்குகளை ராணுவ நடவடிக்கையின் மூலம் அடைவோம் என அவர் எச்சரித்துள்ளார். ஆனால், அமைதியை எட்டும் தங்களது முயற்சிகளுக்கு தாக்குதல் மூலமாக ரஷ்யா பதிலளிப்பதாக ஜெலன்ஸ்கி சாடியுள்ளார். இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அதிபர் டிரம்ப்பை ஜெலன்ஸி இன்று சந்திக்கிறார்.


