News August 4, 2024
சீக்கிரம் எழுவதற்கான சில டிப்ஸ்..!

*உங்கள் அலாரத்தை வழக்கத்தை விட தினமும் 15 நிமிடங்கள் குறைக்கலாம். உதாரணமாக, 8 மணிக்கு எழுபவர்கள் 7.45க்கு அலாரம் வைக்கலாம். *சீக்கிரம் எழுவதற்கு, இரவில் உடலுக்கு போதுமான ஓய்வை அளிக்க வேண்டும். அதற்கு இரவில் அதிக நேரம் விழிக்காமல், முன் கூட்டியே தூங்க வேண்டும். *சீக்கிரம் எழுந்திருக்க மனதளவில் தயார்படுத்துங்கள். இது உடலில் உள்ள பயாலஜிக்கல் கிளாக் மூலம் நம்மை சரியான நேரத்தில் எழுப்பும்.
Similar News
News January 24, 2026
நெல்லை: இளம்பெண் தற்கொலை!

களக்காடு அருகே கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த செல்வின் துரை – கஸ்தூரி (22) தம்பதியினர். கடந்த 19ம் தேதி கஸ்தூரிக்கும் அவரது மாமியாருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
News January 24, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், இன்று(ஜன.24) மேலும் ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,620-க்கும், சவரன் ₹1,16,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது.
News January 24, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக? பிரேமலதா சஸ்பென்ஸ்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என கூறிய பிரேமலதா, இதுவரை கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், உரிய நேரத்தில் நல்ல முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு கால அவகாசம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒரு அம்மாவாக தேமுதிகவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும் பேசியுள்ளார்.


