News October 26, 2025
பதற்றத்தை குறைக்க சில டிப்ஸ்

பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் அமைதியை குலைத்து, வேலை, உறக்கம், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மேலும், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, பதற்றத்தை குறைப்பது மிக அவசியம். இதற்கு என்ன செய்யலாம் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 26, 2025
சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்ததா பாகிஸ்தான்?

சவுதியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பலுசிஸ்தானை மறைமுகமாக தனிநாடு என்று குறிப்பிடும் வகையில் சல்மான் கான் பேசியிருந்தார். இதையடுத்து, அவரை கண்காணிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் தனி நாடு கேட்டு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
பிஹார்: INDIA கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள்

பிஹார் எதிர்க்கட்சிகளின் CM வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், ₹50 லட்சத்திற்கு காப்பீடு திட்டம். முடி திருத்தம் செய்பவர்கள், தச்சர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக, குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
News October 26, 2025
ரோஹித் படைத்த வரலாற்று சாதனை

ஆஸி.,க்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இதன்மூலம், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓபனிங் இறங்கி இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார். ரோஹித் 15,787 ரன்களுடன் முதலிடத்திலும், சேவாக் 15,758, சச்சின் 15,335 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 2007-ல் ரோஹித் அறிமுகமானாலும், 2013 முதலே ஓபனிங் இறங்கி விளையாடி வருகிறார்.


