News May 31, 2024

கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்…

image

*தினமும் 8 மணி நேரம் தூங்கி கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். *அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். *குறைவான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்க கூடாது. *பழங்கள், காய்கறிகள், கீரை, மீன், முட்டை போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். *ஆண்டுக்கு ஒருமுறை கண்களை பரிசோதிக்க வேண்டும். *அவ்வப்போது கண்களை மூடி, விரல் நுனியால் மெதுவாக அழுத்தி விடலாம்.

Similar News

News September 18, 2025

அதானிக்கு நற்சான்று அளித்த SEBI

image

ஷேர் விலையை செயற்கையாக அதிகரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அதானி குழுமம் மீது USA-வைச் சார்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இது அதானி குழுமத்தின் பங்குகளை பெரிதாக பாதித்த நிலையில், அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், அதானி குழுமத்தில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என கூறியுள்ள SEBI, ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

News September 18, 2025

அரசியலமைப்பை காக்க போகும் Gen Z: ராகுல் நம்பிக்கை

image

ராகுல் காந்தியின் புதிய X பக்க பதிவு விவாதங்களை எழுப்பியுள்ளது. நாட்டின் இளைஞர்கள், நாட்டின் மாணவர்கள், நாட்டின் Gen Z தலைமுறையினர் ஆகியோர் அரசியலமைப்பை காப்பாற்றுவர், ஜனநாயகத்தை பாதுகாப்பர், அவர்களே வாக்கு திருட்டையும் நிறுத்துவார்கள். நான் அவர்களுடன் நிற்கிறேன். ஜெய் ஹிந்த்! என்று அதில் ராகுல் குறிப்பிட்டுள்ளார். பெரியவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் ராகுல் Gen Z, இளைஞர்களை குறிவைக்கிறாரோ?

News September 18, 2025

இரவு தூங்குவதற்கு முன் இதை பாருங்க

image

ஒரே ஒரு நாள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை என்றாலும் கூட, அடுத்த நாளில் 60% வரை அதிகமாக எதிர்மறையான குணாதிசயங்களுடன் நடந்துகொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அரைகுறையான தூக்கம் மூளையின் செயல்பாடுகளை பாதித்து மன அழுத்தம், கோபம், பதற்றம், எரிச்சல், மன ஊசலாட்டங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதாம். இதை தடுக்க சரியான தூக்கம் அவசியம். எனவே, இரவு 10 மணிக்குள் தூங்க சென்றுவிடுங்கள்.

error: Content is protected !!