News April 6, 2025
சில சூப்பர் கிச்சன் டிப்ஸ்…

➤பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு, சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது ➤தோசை மிருதுவாக இருக்க, மாவு அரைக்கும்போது வேகவைத்த அரிசியை சேர்த்து அரைக்கவும் ➤உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போனால், அதில் பாலை ஊற்றி சிறிது நேரம் விட்டு பயன்படுத்தினால் புதியது போல இருக்கும் ➤எண்ணெய்யை சூடாக்கும்போது புகை வராமல் இருக்க, எண்ணெய்யில் சிறிதளவு புளியை போடுங்கள். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க!
Similar News
News December 7, 2025
School Fees-க்கு ₹1 லட்சம் தருகிறது அரசு!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை வழங்குகிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 7, 2025
WORLD CHAMPION – காசிமேடு கீர்த்தனா!

காசிமேடு கீர்த்தனா- கேரம் விளையாட்டில் தவிர்க்க முடியாத பெயர். மாலத்தீவில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் கீர்த்தனா(21) ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று, உலக சாம்பியன் ஆகியுள்ளார். தந்தையை சிறுவயதிலேயே இழந்த நிலையில், கீர்த்தனாவின் 2 தம்பிகளின் வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது. வறுமை வாட்டினாலும், விடாமுயற்சியால் வென்ற கீர்த்தனாவிற்கு பாராட்டுகள்!
News December 7, 2025
BREAKING: விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

ஈரோட்டில் டிச.16-ல் விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் 75 ஆயிரம் பேர் வந்து, செல்லும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் இன்று அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், இடம் சிறியதாக இருப்பதாக கூறி, தவெக கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது, விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.


