News January 25, 2025
திமுகவை பார்த்து சிலருக்கு எரிச்சல்: உதயநிதி

தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயல்வதாக துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். NTK நிர்வாகிகள் திமுகவில் இணையும் விழாவில் பேசிய அவர், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியில் சேர்வதை பார்த்தால் சிலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்றார். திமுக பல கடினமான காலகட்டங்களை தாண்டி வந்துள்ளதாகவும், தனது கொள்கையை மட்டும் எப்போதும் விட்டுவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 23, 2025
அனைத்து சாதியினரையும் நீதிபதியாக்கிய கவாய்!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, பல மாநில ஐகோர்ட்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 129 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 93 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் SC பிரிவினர், 11 OBC, 13 சிறுபான்மையினர் மற்றும் 15 பெண் நீதிபதிகள் அடங்குவர்.
News November 23, 2025
BREAKING: அதிமுக அறிவித்தது

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடும் இப்பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.


