News September 18, 2025
மீண்டும் தள்ளிப்போகிறதா தனி ஒருவன்-2?

தனி ஒருவன்-2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், தனி ஒருவன்-1 ஐ தயாரித்த AGS நிறுவனத்திடமே 2-ம் பாகத்திற்கான கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஆனால் அர்ச்சனா கல்பாத்தியோ, இது சரியான நேரமில்லை என கூறியிருக்கிறார். தனி ஒருவன்-1 வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2ம் பாகம் வருவது டவுட்தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Similar News
News March 3, 2026
காஞ்சிபுரம் கால்வாயில் ஆண் சடலம்!

மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!


