News March 14, 2025
காணாமல் போனவரை கண்டுபிடித்த சோஷியல் மீடியா

பிஹாரைச் சேர்ந்த தேவி, கடந்த பிப்.23ல் தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கும்பமேளா கூட்டநெரிசலில் தொலைந்து போனவர், அங்கிருந்து ரயில் ஏறி ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சோனி தேவி தங்க இடம் கொடுத்து பராமரித்துள்ளார். அவரை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட, தேவியின் மகன் தன் தாயைக் கண்டுபிடித்து அழைத்து சென்றுள்ளார்.
Similar News
News March 11, 2026
IPL தொடர் தள்ளிப் போகிறதா?

கேஸ் தட்டுப்பாடு காரணமாக IPL போட்டிகள் திட்டமிட்டபடி வரும் 28-ல் தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலை நீடித்தால், ஹோட்டல்களில் தங்கும் வீரர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். விமான சேவை பாதித்தால் வீரர்கள் பயணம் செய்வது சிரமமாகும். இந்நிலையில், IPL தொடங்குவதற்குள் நிலைமை கட்டுக்குள் வரவில்லை எனில், மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என IPL தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.
News March 11, 2026
தமிழர் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுரை: பியூஷ் கோயல்

திருச்சியில் நடைபெறவுள்ள NDA கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் பேசிய பியூஷ் கோயல், தமிழக மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். உதயநிதியின் தமிழர் விரோத கலாச்சாரம், தமிழர் விரோத போக்கு மற்றும் ஸ்டாலின் அரசின் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் விரும்புவதாகவும், EPS தலைமையிலான NDA கூட்டணிக்கு தமிழகத்தில் ஆதரவு அலை வீசுவதாகவும் தெரிவித்தார்.
News March 11, 2026
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

*படிக்கும்போது முக்கிய Formulas அனைத்தையும் எழுதி படிப்பது மனதில் ஆழப் பதியும். *தேர்வு நாள்களில் சரியான நேரத்தில் சாப்பாடு, 6-7 மணி நேரம் தூங்குவது ஞாபக சக்தியை அதிகரிக்கும். *தேர்வுக்கு முன் பதற்றத்தைத் தவிர்க்க <<8036229>>Breathing Exercise<<>> பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தும். *தேர்வு சமயத்தில் TV, செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். வாழ்த்துகள்! SHARE IT.


