News March 3, 2025
மருத்துவர்கள் நியமனத்தில் சமூக அநீதி: அன்புமணி

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என அன்புமணி கூறியுள்ளார். கொளத்தூரில் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கூட இல்லை எனவும், மருத்துவர்களை பணியமர்த்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவர்களை புதிதாக நியமிக்காமல், அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 3, 2025
BREAKING: CM ஸ்டாலின் தாயார் அப்போலோவில் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் இருந்த உறவினர்கள் உடனே அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2025
படுக்கைக்கு முன் தம்பதிகள் செய்ய வேண்டியவை ❤️

❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.
News March 3, 2025
நாளை மதியம் 2:30 மணிக்கு…

சாம்பியன்ஸ் டிராபியின் மாபெரும் போட்டியாக நாளை நடக்கும் முதல் செமி பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. CT வரலாற்றில் இந்தியா 3 முறையும், ஆஸி., 2 முறையும் வென்றுள்ளன. ஒரு மேட்ச் டிராவில் முடிந்தது. லீக் சுற்றில் 3 ஆட்டங்களையும் வென்று கெத்தாக நுழைந்துள்ளது இந்திய அணி, 2023 உலகக் கோப்பை பைனலில் தோல்வி அடைந்ததற்கு ஆஸி.யை பழிதீர்க்க காத்திருக்கிறது. இதில் வெல்லப் போவது யார்?