News December 5, 2024

சமந்தாவை ஓவர் டேக் செய்த சோபிதா

image

IMDBயில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சோபிதா துலிபாலா 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், சோபிதாவின் பின்னணியை தெரிந்து கொள்ள பலர் இவரை பற்றி தேடியதால், இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சமந்தா 8ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் திரிப்டி டிம்ரி, தீபிகா படுகோனே 2ஆம் இடத்திலும், இஷான் கட்டர் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

Similar News

News October 31, 2025

அக்டோபர் 31: வரலாற்றில் இன்று

image

Halloween
*1875 – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்.
*1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
*1931 – தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது.
*1984 – இந்திரா காந்தி நினைவுநாள்.

News October 31, 2025

இளம்பரிதிக்கு ஸ்டாலின் வாழ்த்து

image

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள இளம்பரிதிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையால் தமிழக சாம்பியன்களின் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தை சேர்த்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் செஸ்ஸில் சூரியன் உதிக்கும் போது, திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் பல முத்துகள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 31, 2025

வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

image

*கண்கள், உங்கள் ஆன்மாவுக்கு ஜன்னல்.
*அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
*எதுவுமே செய்யாமல் எதுவும் வருவதில்லை.
*புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள்.
*உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள்.
*பலரிடம் கேளுங்கள், சிலரிடம் பேசுங்கள்.

error: Content is protected !!