News March 29, 2024
குட்டித்தூக்கம் போடுவதில் இவ்வளவு நன்மைகளா?

அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன், லேசாக கண்ணை கட்டும். அப்போது குட்டித்தூக்கம் போடுவது பல நன்மைகளை அளிக்குமாம். குட்டித்தூக்கம் என்பது 10 முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். தேவையற்ற கவலை, பதற்றத்தை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்குமென சமீபத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
கால்பந்து விளையாடிய போது MP திடீர் மரணம்!

மேகாலயாவில் கால்பந்து மைதானத்தில் உள்ளூர் MP ரிக்கி சிங்கோன் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது நண்பர்களுடன் உற்சாகமாக கால்பந்து விளையாடிய போது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது அங்கு டாக்டர் இல்லை. உடனடியாக அங்கு இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
News February 20, 2026
எப்ஸ்டீன் பைல்ஸ்.. இங்கிலாந்து மன்னரின் தம்பி கைது!

<<19008416>>எப்ஸ்டீன் பைல்ஸில்<<>> வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிர வைத்தது. இதில் புதிய திருப்பமாக இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்தனர். 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் சிறப்பு வர்த்தகத் தூதராக இருந்தபோது ஆண்ட்ரூ அரசின் ரகசிய அறிக்கைகளை, பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே என தம்பியின் கைது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 615
▶குறள்:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
▶பொருள்: தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.


