News March 26, 2024
இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கு இதுவரை 628 ஆண்கள், 109 பெண்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 405 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் மேலும் பலர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 2, 2026
ஏன் இதை ‘தேன் நகரம்’ என்று அழைக்கின்றனர் தெரியுமா?

பாரம்பரிய மற்றும் நவீன முறைகளில் தேன் உற்பத்திக்கு பெயர் பெற்ற, உத்தரபிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச், ‘தேன் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஊர், பழத்தோட்டங்கள் மற்றும் மலர் தோட்டங்களுடன் தேனீக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் ஐரோப்பா, வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
News January 2, 2026
கொடை வள்ளல் எலான் மஸ்க்!

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், மிகப்பெரிய கொடை வள்ளலாகவும் வாழ்ந்து வருகிறார். அவர் சுமார் ₹900 கோடி மதிப்பிலான டெஸ்லா நிறுவன பங்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. 2021-ல் $5.74 பில்லியன், 2022-ல் $1.95 பில்லியன், 2024-ல் $112 மில்லியன் மதிப்பிலான பங்குகளை வழங்கியிருக்கிறார். இத்தனை தானங்களுக்கு பிறகும், அவருடைய நிகர மதிப்பு $619 பில்லியன் ஆக உள்ளது.
News January 2, 2026
UPI-ல் சாதனை.. ₹300 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை

UPI பரிவர்த்தனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில், 21.6 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன் மதிப்பு ₹27.97 லட்சம் கோடி ஆகும். UPI வரலாற்றிலேயே இது அதிகபட்சமாகும். சராசரியாக ஒவ்வொரு நாளும் 698 மில்லியன் டிஜிட்டல் பேட்மெண்ட்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 222.8 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், அதன் மதிப்பு ₹299.7 லட்சம் கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.


