News June 2, 2024
வான் அளக்கும் பனிமலைச் சிகரங்கள்

வான் பரப்புடன் போட்டிப்போடும் விதமாக கண்களை வியக்க வைக்கும் மலைச்சிகரங்கள் உலகெங்கும் ஏராளம் உள்ளன. அவை ஒரே நாட்டுக்குள் அமைந்திருக்காமல் அண்டை நாடுகளின் எல்லைகளை கடந்தும் நீண்டு காட்சி அளிக்கின்றன. அத்தகைய மலைச்சிகரங்கள் சில உங்கள் பார்வைக்கு 1. எவரெஸ்ட் (நேபாள் – திபெத் எல்லை) 2.மகாலு 3.லோட்சே 4. சோ ஓயு (நேபாள் – சீனா எல்லை) 5.நங்கா பர்பத் (ஜம்மு-காஷ்மீர்) 6.கே2 (பாகிஸ்தான் – சீனா எல்லை).
Similar News
News September 20, 2025
காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
News September 20, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து, ₹145-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு வெள்ளி விலை விற்கப்படுவது இதுவே முதல்முறை. குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் ₹4,000 அதிகரித்துள்ளது.
News September 20, 2025
முத்திரை பதித்த வில்லன்கள்

சினிமாவில் வில்லன் இல்லை என்றால் த்ரில்லும் சுவாரசியமும் இருக்காது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சில நடிகர்கள், நாயகனுக்கு நிகராக கொண்டாடப்படுகின்றனர். அவர்கள், தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு முத்திரை பதித்துள்ளனர். அவர்களில் சிறந்த சிலரின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த வில்லன் யாருன்னு கமெண்ட்ல சொல்லுங்க.