News June 19, 2024

புகைபிடிக்கும் பழக்கம் குறைகிறது

image

நாட்டில் புகைபிடிக்கும் பழக்கம் கணிசமாக குறைந்திருக்கிறது. NFHS தகவல்களின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு 57% ஆண்கள் புகைபிடித்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு 38% ஆண்கள் மட்டுமே புகைக்கின்றனர். 2005ஆம் ஆண்டு 10.8% பெண்கள் புகைபிடித்த நிலையில் 2021ஆம் ஆண்டு அது 8.9%ஆக குறைந்துள்ளது. இது ஆரோக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Similar News

News March 15, 2026

பிறந்த குழந்தைகளுக்கும் இனி No Sugar தானா?

image

பிறந்த குழந்தைகளுக்கான (6 – 24 மாதங்கள் வரை) உணவுகளில் செயற்கை சர்க்கரை இல்லாமல் இருக்குமாறு FSSAI, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மிகச்சிறிய வயதிலேயே உடற்பருமன், வளர்சிதை மாற்ற குறைபாடுகளில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாக FSSAI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் உடல் பருமனுடைய குழந்தைகளின் விகிதம் 2.1%-லிருந்து 3.4% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவகம் மவுசு அதிகரிப்பு

image

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் சில ஹோட்டல்களில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், விலையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களிலுள்ள அம்மா உணவகங்களில் 25 – 50% வரை வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இங்கு கேஸ் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News March 15, 2026

விஜய்க்காக காத்திருக்கிறாரா இபிஎஸ்?

image

விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக, இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து EPS பேசவில்லை என கூறப்பட்டது. இதற்கிடையில், இளம், நடுத்தர வயது வாக்காளர்கள் திமுகவை விட தவெகவிற்கே அதிகம், இத்தேர்தலில் விஜய் கிங் மேக்கராக இருப்பார் என நேற்று வெளியான IPDS கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. தற்போது விஜய் டெல்லியில் இருக்கும் சூழலில் 80 தொகுதி ஆஃபருடன் ADMK கூட்டணியில் TVK இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!