News April 9, 2024
ஸ்மித் கேப்டன் தான்; ஆனால் தோனி தான் முடிவெடுப்பார்

தோனி புனே அணியில் விளையாடி போது அவர் விருப்பம் போல் களமிறங்குவார் என ஆஸி., முன்னாள் வீரர் டேன் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். 2017இல் தோனி புனே அணியில், ஸ்மித் கேப்டன்சியின் கீழ் விளையாடினாலும், தோனி விருப்பப்பட்ட பேட்டிங் ஆர்டரில் களம் இறங்குவார். இதை கேப்டன் ஸ்மித்தோ, பயிற்சியாளர் பிளமிங்கோ தடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி அந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது.
Similar News
News March 15, 2026
திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
News March 15, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா தோல்வி

*மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஃபைனலில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது *சர்வதேச உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் 8.21 மீ நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார் *இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில், யூகி பாம்ப்ரி-கோரன்சன் இணை தோல்வி *ISL கால்பந்தில் பெங்களூரு-மோகன் பகான் இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
News March 15, 2026
டிரில்லியன் டாலர் கம்பெனிக்கு 5 ஊழியர்கள் போதும்: சலீம்

நிறுவனங்களின் கட்டமைப்பை AI தீவிரமாக மாற்றி வருவதாக OpenExO நிறுவனர் சலீம் இஸ்மாயில் கூறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்க 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்பட்டனர். அந்த எண்ணிக்கை படிப்படியாக தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில், AI வளர்ச்சியால் 5 ஊழியர்களை கொண்ட சிறிய குழுவே டிரில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


