News January 19, 2025
ஸ்மைல் ப்ளீஸ், டிரம்ப்! அம்பானி தம்பதியுடன் US அதிபர்

ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி டிரம்ப்பை சந்தித்த போட்டோ வெளியாகியுள்ளது. US அதிபராக டிரம்ப் பதவியேற்பது தொடர்பான முக்கிய விழாக்களில் விருந்தினராக பங்கேற்க அம்பானி தம்பதி US சென்றுள்ளனர். இரு நாடுகளுக்கும், உலகுக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் ஆட்சியாக அவரது ஆட்சி அமைய, டிரம்புக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
விஜய் – த்ரிஷா.. Bodyguard சொன்ன தகவல்

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து SM பலரும் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜய்யின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ், தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது’ என கில்லி படத்தில் விஜய் – த்ரிஷா இருவரும் நடித்த ‘கொக்கரக்கொக்கர கோ’ பாடலை ஃபையர் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
News March 8, 2026
அன்புமணியை அதிரவிடும் ராமதாஸின் NDA கணக்கு!

NDA கூட்டணியில் இணைந்த அன்புமணிக்கு போட்டியாக திமுக கூட்டணியுடன் செல்ல நினைத்த ராமதாஸுக்கு விசிக செக் வைத்து தடுத்துவிட்டது. இதையடுத்து <<19303393>>தவெகவுடன் கூட்டணி என பேசப்படும் நிலையில்<<>>, பதறிப்போய் பாஜக தரப்பு ராமதாஸை தங்கள் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்நிலையில் 5 சீட் + மாம்பழம் சின்னம் என்ற நிபந்தனையுடன் பேசி வருவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 8, 2026
தங்கம் விலை இந்த வாரத்தில் ₹5,800 குறைந்தது!

தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடும் உயர்வைக் கண்டாலும், வர்த்தக ரீதியாக வார இறுதியில் சவரனுக்கு ₹5,800 சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200-க்கு விற்பனையான தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


