News December 26, 2025

SMAT தொடரில் SMART ஆக வேலை செய்த தோனி

image

SMAT தொடர் தொடங்கியது முதலே தோனியின் ஆலோசனைகளை பெற்று வந்ததாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் வாரியத்தின் து.செயலாளர் சபாஷ் நதீம் கூறியுள்ளார். SMAR தொடரை முழுமையாக பின்பற்றிய தோனி, வீரர்களின் பலம், பலவீனங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளையும் வழங்கினார் என்றார். மொத்தமாக தங்கள் அணி வளர்வதற்கு தேவையானவற்றை செய்ய தோனி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் நதீம் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 27, 2026

10th முடித்தாலே வேலை… APPLY NOW!

image

இந்தியன் ஆயில் நிறுவனம், தென் மண்டலப் பிரிவில் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *கல்வித்தகுதி: 10th, டிகிரி. *தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு. *வயது வரம்பு: 18- 24 வயதுக்குள். *உதவித்தொகை வழங்கப்படும். *கடைசி தேதி: பிப்.10. விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT!

News January 27, 2026

பிப்ரவரி நடுவில் கூட்டணி முடிவு: பிரேமலதா

image

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.

News January 27, 2026

சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

image

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!