News December 5, 2024
சிகரெட்டை போல தான் ஸ்மார்ட் போன்களும்..!

சிகரெட் பாக்ஸ்களில் இடம்பெற்றுள்ளதை போன்று, ஸ்மார்ட் போன்களும் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை போன்களில் இடம்பெற செய்ய ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. போன்களுக்கு அடிமையாவதை ‘பொது சுகாதார தொற்றுநோய்’ என வரையறுத்து, 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போனை தடை செய்யவும், அந்நாட்டு அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த ஐரோப்பிய நாட்டை போல், இந்தியா எப்போது விழிக்கும்?
Similar News
News January 4, 2026
திருப்பத்தூர்: லைசன்ஸ், RC வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News January 4, 2026
அரசு ஊழியர்களை தெருவில் நிறுத்தியது BJP: பெ.சண்முகம்

TN அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என கூறிய நயினாருக்கு CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர், அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது BJP ஆட்சிதான் என்று சாடிய அவர், நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை BJP அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் நயினாருக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 4, 2026
பிக்பாஸில் இந்த வார எவிக்ஷன்.. இவர் தான்

பிக்பாஸில் பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என பேசப்பட்டது. ஆனால், ஷோ முடிய இன்னும் 2 வாரங்களே இருப்பதால் எவிக்ஷனை திட்டமிட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் இருக்கும் நிலையில், அரோரா மட்டும் TTF வென்று எவிக்ஷனிலிருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால் சுபிக்ஷா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


