News March 12, 2025
விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்கள்

3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனையடுத்து, ₹20,000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.
Similar News
News March 12, 2025
பாஜகவில் சேரவில்லை.. சரத் ஆதரவாளர் அறிக்கை

பாஜகவில் தாம் சேரவில்லை என்று சரத்குமாரின் ஆதரவாளரும், சுரண்டை தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமக-வை பாஜகவுடன் சரத்குமார் இணைத்ததில் உடன்பாடு இல்லை என்றும், தாம் எந்த கட்சியிலும் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் புளியங்குடியில் நடக்கும் பாஜக கூட்டத்தில் பங்கேற்போர் பெயர் பட்டியலில் தனது பெயரை அனுமதியின்றி போட்டதை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 12, 2025
முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையது அபித் அலி (83) அமெரிக்காவில் காலமானார். இவர், 1967 முதல் 1974 வரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,018 ரன்கள் குவித்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த இவர், ஓய்வு பெற்ற பின் அமெரிக்காவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பதற்காக அங்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.
News March 12, 2025
விஜய்யை இழிவாக சித்தரித்து கார்ட்டூன்… குவியும் கண்டனம்…

தவெக தலைவர் விஜய்யை தினமலர் பத்திரிகை இழிவாக சித்திரித்திருப்பதாக அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய்யை ஆடு போல சித்திரித்திருக்கும் தினமலர், ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையை புகட்டுவது போல கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, தினமலர் வரம்பு மீறி செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.