News January 2, 2025
ஜெட் வேகத்தில் உயரும் சின்ன வெங்காயம் விலை!

சின்ன வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து, பெருமளவு குறைந்ததே இதற்கு காரணம். கோயம்பேடு மொத்த சந்தையில் 4 நாட்களுக்கு முன்பு வரை கூட ரூ.70-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இன்று ரூ.130-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.150 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
கரூர் விவகாரம்: CBI பதிவு செய்த FIR கோர்ட்டில் தாக்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் நாட்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.
News October 24, 2025
வாரன் பஃபெட்டின் பொன்மொழிகள்

*பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள். *தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள். *நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவான நபர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள். *ஒருபோதும் ஒற்றை வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்.
News October 24, 2025
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், கடந்த ஜூன் மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை HC இருவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.