News September 18, 2025
இன்று SL vs AFG: சூப்பர் 4-க்கு தகுதி பெறப்போவது யார்?

ஆசிய கோப்பை தொடரில் இன்று SL vs AFG அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகும் என்பதால், ஆஃப்கன் கடுமையாக போராடும். அதேவேளையில், தோல்வியை தவிர்க்க இலங்கை முயற்சிக்கும். ஆஃப்கன் இதுவரை 2 போட்டிகளில் ஒன்றிலும், இலங்கை இரண்டிலும் (NRR 1.54) வென்றுள்ளது. ஒருவேளை ஆஃப்கன் அணி தோற்றால், வங்கதேச அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.
Similar News
News March 8, 2026
கோடிக்கணக்கில் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்கா, தற்போது ஆயுத விற்பனையை தொடங்கியுள்ளது. அதன்படி ₹1,290 கோடி மதிப்புடைய ஆயத விற்பனையை செய்ய தனது அவசர அதிகாரத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் தலா 1,000 பவுண்டுகள் எடையுள்ள 12,000 குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது அமெரிக்கா. அத்துடன் முக்கிய தொழில்நுட்ப சேவைகளும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட உள்ளது.
News March 8, 2026
இலவசம் என்பது வளர்ச்சியல்ல, அது வீழ்ச்சி: சீமான்

இதுவரை இருக்கின்ற அரசியல் கோட்பாடு, நிலைபாட்டில் முற்றிலுமாக தங்கள் கட்சியின் கோட்பாடு மாறுபட்டது என சீமான் பேசியுள்ளார். புதுச்சேரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அனைத்துக்கும் இலவசம் அறிவிக்கிறார்கள். இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம் என்றார். இலவசம் பெற வேண்டிய வறுமை இன்றி மக்களை உயர்த்துவதே தமது கடமை எனவும் தெரிவித்தார்.
News March 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்: அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். ▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.


