News September 26, 2025
அக்.1-ல் SK-வின் ‘மதராஸி’ OTT-யில் வெளியாகிறது

ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், படம் பாக்ஸ் ஆபிசில் ₹100 கோடி வசூலை கடந்தது. படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான சூழலில், வரும் அக்டோபர் 1-ம் தேதி அமேசான் ப்ரைம் OTT-ல் வெளியாக உள்ளது. ருக்மிணி வசந்த, வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
Similar News
News September 26, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது.. காரணம் என்ன?

தங்கம் விலை இம்மாதம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆக.31-ம் தேதி ₹76,960-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் இன்று(செப்.26) ₹84,400-க்கு விற்பனையாகிறது. இந்த மாதத்தில் இதுவரை ₹7,440 உயர்ந்துள்ளது. USA வரிவிதிப்பு, இந்திய <<17836820>>பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால்<<>> முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதே விலை உயர்வுக்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயருமாம்.
News September 26, 2025
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது?

‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா, வரும் டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இப்படியொரு இசை வெளியீட்டு விழாவை பார்த்திருக்கவே முடியாது என்ற அளவுக்கு, மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். 2026 பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸாக உள்ளது.
News September 26, 2025
NATO தலைவரை கண்டித்த இந்தியா

PM மோடி புடினை தொடர்பு கொண்டு, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் உத்தி என்ன என கேட்டதோடு, USA-ன் வரியால் இந்தியா பாதிக்கப்படுவதாக கூறியதாகவும் NATO தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்து இருந்தார். ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது, இப்படிப்பட்ட ஒரு உரையாடலே நடக்கவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது. NATO தலைவர் என்ற மதிப்புமிக்க பதவியில் இருப்பவர், பொதுவெளியில் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.