News March 26, 2025
உருவம் தவிர்; உள்ளத்தை பார்

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.
Similar News
News November 15, 2025
பின்தங்கி இருக்கும் இந்திய மாநிலங்கள்

UDISE+ 2024-25 அறிக்கையின்படி, இந்தியாவில் மாநிலம் வாரியாக கணினி வசதி கொண்ட அரசுப் பள்ளிகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 99.6% பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. ஆனால், 50%-க்கும் குறைவாக 10 மாநிலங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
பழம் பெரும் ஹாலிவுட் நடிகை காலமானார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை கிர்க்லேண்ட் (84) உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் வெளியான காமெடி படமான ‘அனா’, ‘கோல்டு பீட்’, ஹாரர் படமான ‘த ஹாண்டட்’, ஃபேன்டஸி படமான ‘புரூஸ் அல்மைட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘அனா’ படத்திற்காக அவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 15, 2025
வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது: சஞ்சு

RR-க்கு தான் என்றும் கடமைப்பட்டுள்ளதாக சஞ்சு சாம்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார். CSK-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், RR குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன் என்ற அவர், அணியில் சில உறவுகளையும் பெற்றுள்ளதாக நெகிழ்ந்துள்ளார். சஞ்சுவின் CSK வருகை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?


