News November 28, 2024

இன்று பூஜையுடன் தொடங்கும் SK24 படப்பிடிப்பு?

image

சிபி சக்ரவர்த்தி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் SK-க்கு ₹60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் SK-வின் 23ஆவது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 20, 2025

ராசி பலன்கள் (20.08.2025)

image

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – நலம் ➤ மிதுனம் – களிப்பு ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – பரிசு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – கவலை ➤ தனுசு – அச்சம் ➤ மகரம் – உதவி ➤ கும்பம் – ஆதரவு ➤ மீனம் – பயம்.

News August 20, 2025

நர்ஸ் நிமிஷா பெயரில் போலி வசூல்: MEA Fact Check

image

கேரள நர்ஸ் நிமிஷா வழக்கில் மத்திய அரசின் பெயரில் போலியாக வசூல் நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமனில் 2017-ல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா கடந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்தார். மத்திய அரசின் தலையீட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களே உஷார்..!

News August 19, 2025

நல்ல தூக்கம் வேண்டுமா..?

image

*மாலை 4 மணிக்கு மேல் தூங்குவதைத் தவிர்த்திடுங்கள். *தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். *தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பிருந்தே கஃபைன் கலந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். *மதியம் 12 மணிக்கு பிறகு டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்திடுங்கள். *மென்மையான இசையை படுக்கை அறையில் ஒலிக்கவிட்டு, உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!