News March 30, 2025
சல்மான் கானால் கலக்கத்தில் SK ஃபேன்ஸ்!

இன்று வெளியான சிக்கந்தர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சல்மான் ரசிகர்கள், படத்தைக் கொண்டாடினாலும், பொதுவான ஃபேன்ஸ் பல காட்சிகள் ‘Cringe’ ஆக இருப்பதாகவே பதிவிட்டு வருகின்றனர். இதனால், SK ஃபேன்ஸ்தான் பதறுகின்றனர். காரணம், சிக்கந்தரை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தான் அடுத்த SKவின் மதராஸியை இயக்கி இருக்கின்றார். கடவுளே படம் நல்லா இருக்கணும் என இப்பவே வேண்டிக் கொள்ள தொடங்கிவிட்டனர்.
Similar News
News April 1, 2025
பிளவுவாத அரசியல்: ஸ்டாலினை விமர்சித்த யோகி

மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் நிலையில், TN CM ஸ்டாலின் மீது UP CM யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதால் மொழி அடிப்படையில் பிளவை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், அவர் குறுகிய அரசியல் செய்வதாகவும் யோகி சாடியுள்ளார். இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 1, 2025
CSK போட்டியில் செல்போன்கள் அபேஸ் .. 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நடத்த IPL போட்டியின் போது 36 செல்போன்களை திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியை காண வந்தவர்களிடம் இருந்து செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் உட்பட 8 பேரும், வேலூர் வழியாக தப்ப முயன்றபோது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
News April 1, 2025
இந்தியா வருகிறார் ‘விண்வெளி நாயகி’!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பார்த்தபோது, இந்தியாவும் இமயமலையும் ரம்மியமாக காட்சியளித்ததாக இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விரைவில் தனது தந்தையின் நாடான இந்தியாவிற்கு செல்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு வரவேண்டும் என சுனிதாவுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.