News January 7, 2025
ரஜினியுடன் மோதும் SK?

ரஜினியின் ‘கூலி’ படத்தை, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே நாளில் முருகதாஸ் இயக்கத்தில் SK நடித்து வரும் அவரது 23ஆவது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 2 படங்களின் ஷூட்டிங் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 14, 2025
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

செம்பனார்கோயில், ஆறுபாதி விளநகரை சேர்ந்த அன்பரசன் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கவுடு என்ற செல்வகுமார் (26) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைத்தனர்
News September 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 14, 2025
பாராட்டு விழாவை நம்ப முடியவில்லை: இளையராஜா

இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு <<17700409>>பாராட்டு விழா <<>>நடத்தியது தமிழக அரசுதான் என இளையராஜா தெரிவித்தார். சிம்பொனி இசையமைக்க செல்லும் முன்னே CM ஸ்டாலின் நேரில் வாழ்த்தியதாக கூறிய அவர், இன்று பாராட்டு விழா நடத்தியதை நம்ப முடியவில்லை என கூறினார். தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் CM கருணாநிதிதான் கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.