News December 19, 2024
SK – அருண்விஜய்: ஓய்ந்த சண்டை!

நேற்று நடந்த வணங்கான் Audio வெளியீட்டில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அதில் பேசியவர், அருண்விஜய் எனக்கு சீனியர். அவர் விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்வதைதான் அவரோட வெற்றியா பார்க்கிறேன் என்றார். முன்பு SK – அருண்விஜய் இடையே உரசல் இருந்ததாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அருண் விஜய்யின் பட விழாவில் SK கலந்துகொண்டது சச்சரவை முடித்துவைத்துள்ளது.
Similar News
News September 17, 2025
காலாண்டு விடுமுறை.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

காலாண்டு விடுமுறையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு NSS சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, NSS முகாம்களை 7 நாள்கள் நடத்த வேண்டும். இதில் பங்கேற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 1,000 மரக்கன்று, விதைகள் நட வேண்டும். மண் பாதுகாப்பு, மழைநீர் சேமிப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
News September 17, 2025
சினிமா ரவுண்டப்: அருண் விஜய் படத்தில் தனுஷ்

*தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு
* ‘ரெட்ட தல’ படத்தில் தனுஷ் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு
*விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் ஸ்னீக் பிக் இன்று வெளியாகிறது
* நேற்று வெளியான பைசன் படத்தின் 2-வது பாடலான ‘றெக்க’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
News September 17, 2025
காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

வெந்தய விதை தேநீர் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, கெட்ட கொழுப்பைக் குறைக்க, மாதவிடாய் வலியைப் போக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *வெந்தய விதைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. நண்பர்களுக்கு பகிரவும்.