News April 6, 2024
அசுர வளர்ச்சி காட்டும் எஸ்.ஜே.சூர்யா

விஜய், அஜித் ஆகியோரின் படங்களை இயக்கி வெற்றிப் பட இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா, நடிகராக அறிமுகமாகி அசுர வளர்ச்சி கண்டுள்ளார். தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், நானி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்திலும் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 27, 2025
பிரபல கிரிக்கெட்டருக்கு புற்றுநோய்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015-ல் ODI உலக கோப்பையை வென்ற ஆஸி., கேப்டனான இவர், மூக்கில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக 2006-ல் இவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News August 27, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17531359>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. 2009
2. பானு அத்தையா
3. 33%
4. யென்
5. 1912
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 27, 2025
BREAKING: இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள EPS வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ப நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இபிஎஸ் இல்லத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் 20-க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.