News March 27, 2024

ஐதராபாத்தில் சிக்ஸர் மழை

image

ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது. தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் SRH 173/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 14 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் விளாசப்பட்டுள்ளது. முதல் 10 ஓவர்கள் முடிவில் SRH அணி 148/2 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

Similar News

News February 17, 2026

பாத்ரூமில் நடிகை.. VIDEO எடுத்த நபர்..

image

பெங்களூருவில் நிகழ்ச்சிக்கு சென்ற இடத்திலிருந்த பாத்ரூமில் ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி தன்னை மிரட்டுவதாக கன்னட சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார். அந்த நபர், தனது இன்ஸ்டாவில் வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். பொது இடங்களில் பயன்படுத்தப்படும் கழிப்பறைகளில் உஷாராக இருங்கள்.

News February 17, 2026

பெயரை சொல்லாமல் விஜய்யை அட்டாக் செய்த EPS

image

சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ‘இதயக்கனி’ திரைப்படத்தை EPS பார்த்து ரசித்தார். இதன்பின் அவர் பேசுகையில், சினிமாவில் அரசியலை புகுத்தி வெற்றிகண்ட ஒரே தலைவர் MGR மட்டும்தான் எனத் தெரிவித்தார். நிஜமாகவே உச்சத்தில் இருந்தபோது சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் MGR; இன்றைக்கு யார் யாரோ திரைப்படங்களில் நடித்துவிட்டு MGR-ஐ போன்று கனவு காண்பதாக விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

News February 17, 2026

₹8.3 லட்சம் கோடியில் அதானி AI டேட்டா செண்டர்!

image

சுற்றுச்சூழலுக்கு உகந்த AI டேட்டா செண்டர்களை உருவாக்க ₹8.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. 2035-க்குள் நேரடியாக ₹8.3 லட்சம் கோடியும், தொடர்புடைய துறைகளில் ₹12.45 லட்சம் கோடியும் செலவிட உள்ளது. இதில், சர்வர் உற்பத்தி, கிளவுட் பிளாட்ஃபார்ம் போன்றவையும் அடங்கும். மொத்தத்தில் இந்த முதலீடுகள் 10 ஆண்டுகளில் AI உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!