News July 5, 2025
அடுத்தடுத்து டக் அவுட் ஆகிய 6 பேர்… அசத்தல் சிராஜ்!

தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட், ஆலி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ், பஷீர், பிரைடன் ஆகியோர் டக் அவுட்டும் ஆக இங்கிலாந்து அணி சுருண்டது. இந்த வகையில் 6 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.
Similar News
News July 5, 2025
ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்.. கண்ணீர் அஞ்சலி

பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு இதே நாளில் தான், ரவுடி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி போட்ட இச்சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. எந்த பக்கம் பார்த்தாலும், இந்த கொலை குறித்துதான் பேச்சு. இந்த விவகாரம் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலமாண்டு நினைவு நாளையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
News July 5, 2025
20 வருடங்களுக்கு பிறகு இணையும் தாக்கரே பிரதர்ஸ்!

தாக்கரே சகோதரர்களால் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டால் 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த இருவரும் மராத்தி மொழி பிரச்னைக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். மும்மொழி திட்டத்திற்கு எதிராக இன்று மும்பை NSCI-ல் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் மராத்தி ஆர்வலர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
News July 5, 2025
கச்சத்தீவை விட்டுத் தர மாட்டோம்: இலங்கை அமைச்சர்

கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர் பிரச்னையை தீர்க்க தூதரக அளவிலான பேச்சுக்கு தயாராக உள்ளோம். ஆனால், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டும் என்று இலங்கை அமைச்சர் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.