News August 22, 2024

சிவராமன் தற்கொலை முயற்சி

image

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது நடவடிக்கைக்கு அஞ்சி, 19ம் தேதிக்கு முன்பே அவர் 2 முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். உடல் நலக்குறைவால், தற்போது அவர் மருத்துவமனையில் உள்ளார். காந்தி குப்பத்தில் போலி முகாம் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக, மற்றுமொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

ED ரகசிய கடிதம் தனிநபருக்கு வந்தது எப்படி?

image

நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்ததாகவும், இதனை தமிழக DGP விசாரிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த HC, டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியது. பின்னர், இது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என TN அரசு தரப்பில் கோரப்பட்டது.

News December 7, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.

News December 7, 2025

திமுக சமாதானத்தை போற்றுகிறது: சேகர்பாபு

image

சனாதனத்தை தாங்கள் (திமுக) அழிக்க முயலவில்லை என்று சேகர்பாபு கூறியுள்ளார். வட மாநிலங்களில் வேண்டுமானால் பாஜக நினைத்த மாதிரியான காரியங்கள் நடக்கலாம், ஆனால் தமிழகத்தில் அது பகல் கனவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார். சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் அதை எதிர்ப்பதாக தெரிவித்த சேகர்பாபு, திமுக அரசு சமாதானத்தை போற்றுகின்ற அரசு என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!