News September 7, 2025

2 நாளில் ₹50 கோடியை அள்ளிய சிவகார்த்திகேயன்

image

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘மதராஸி’ கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலில் படம் பட்டையை கிளப்பி வருகிறது. 2 நாள்களில் உலகளவில் ₹50 கோடியை படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளான இன்றும் பல இடங்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்க படம் பாத்தாச்சா?

Similar News

News September 7, 2025

மக்களுக்காக போராடி உதயநிதி சிறை சென்றாரா? EPS கேள்வி

image

பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை எனவும், திமுக கம்பெனியின் அடுத்த அதிபராக வர உதயநிதி துடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மக்களுக்காக போராடி உதயநிதி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 7, 2025

ரஜினியுடன் புதிய படத்தில் நடிக்கிறேன்: கமல் அறிவிப்பு

image

ரஜினியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த SIIMA விருது விழாவில் பேசிய கமல், நல்ல நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து நடிக்க போகிறோம் எனவும், படத்தை பார்த்துவிட்டு அது தரமான சம்பவமா என்று சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். 2 லெஜெண்டுகள் இணையும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 7, 2025

ஆசிய கோப்பை: சாம்சனை ஓரங்கட்ட முடிவு?

image

ஆசிய கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டியில், சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் பயிற்சியின் போது, சாம்சனை விட ஜிதேஷ் சர்மாவிடமே கம்பீர் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த தொடரில் கில்லின் வருகைக்கு பின்னர், ஓபனரான சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், கீப்பர் என்ற முறையில் ஜிதேஷ் சர்மாவுடன் அவர் போட்டியில் உள்ளார்.

error: Content is protected !!