News May 26, 2024
துணை இயக்குநர்களுக்கு பரிசளித்த சிவகார்த்திகேயன்

‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படத்தில் பணியாற்றிய அனைத்து துணை இயக்குநர்களுக்கும் சிவகார்த்திகேயன் பரிசளித்துள்ளார். முன்னதாக, படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த அவர், நேற்று விலையுயர்ந்த ‘ஃபாசில்’ வாட்சை பரிசாக வழங்கியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 28, 2026
பர்கர் நிறுவன ஊழியர்களுக்கு ₹15 கோடி போனஸ்!

அமெரிக்க பர்கர் நிறுவனமான Five Guys, தனது ஊழியர்களுக்கு ₹15 கோடி போனஸ் அறிவித்துள்ளது. தனது 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 17-ல் அறிவிக்கப்பட்ட ‘But One Get One Free’ சலுகைக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. அப்போது ஏற்பட்ட கூட்டத்தால் சரக்கு பற்றாக்குறை, ஆன்லைன் சேவைகள் முடங்குதல் போன்ற சவால்கள் ஏற்பட்டன. இருப்பினும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 1,500 ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
News March 28, 2026
மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள்!

▶ கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது. ▶காலத்தின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது.
▶முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
▶இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம், ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது.
News March 28, 2026
புதிய அவதாரம் எடுக்கும் அஸ்வின்

IPL 2026-ல் அஷ்வின் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக, அவர் ஜியோஸ்டார் குழுவின் சார்பாக வர்ணனையாளர் மைக்கை பிடிக்க இருக்கிறார். இந்தக் குழுவில் சேவாக், டி வில்லியர்ஸ் மற்றும் ரெய்னா போன்றவர்களுடன் அவரும் இணைந்து வர்ணனை செய்ய உள்ளார். அஸ்வின் பந்துவீச்சு போன்ற வார்த்தைகளிலும் ஜாலம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் வர்ணனையில் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


