News March 16, 2024
சிவகங்கை: தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்

எஸ்.காரைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணிபுரியும் பிரிட்டோ என்பவர் அப்பள்ளியில் பயிலும் 4 மாணவியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்தும், அம்மாணவிகளிடம் ஒழுக்க கேடான செயலில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று தலைமை ஆசிரியர் அ.பிரிட்டோவை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
சிவகங்கை: வெளிநாடு போறீங்களா? இது முக்கியம்..!

சிவகங்கை ஆட்சியர் கா.பொற்கொடி அவர்கள் தெரிவித்ததாவது, வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புவோர், eMigrate தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமே சட்டபூர்வமாகச் செல்ல வேண்டும், போலி முகவர்கள், சுற்றுலா விசா வழிகளைத் தவிர்க்க வேண்டும். உதவி பெற 1800 309 3793 (இந்தியா), 080 6900 9900 (வெளிநாடு) எண்கள், nrtchennai@gmail.com மின்னஞ்சல் மற்றும் https://nrtamils.tn. தொடர்பு கொள்ளலாம்.
News September 24, 2025
சிவகங்கை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

சிவகங்கை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 24, 2025
சிவகங்கை: பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆரோக்கியசாமி (51). இவர் அந்த பள்ளியில் படிக்கும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசர் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் ஆரோக்கியசாமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து உத்தரவிட்டார்.