News April 2, 2024
அழகுக்காக 43 அறுவைசிகிச்சை செய்தவரின் நிலைமை

பார்பி பொம்மை போல மாற ஆசைப்பட்டு 43 அறுவை சிகிச்சைகள் செய்த பெண்ணின் நிலைமை மோசமாகியுள்ளது. ஈராக்கை சேர்ந்த டாலியா நயீம் (30) என்ற இளம்பெண் பார்பி போல மாற ஆசைப்பட்டு முகம், மூக்கு மற்றும் மார்பகங்களில் அறுவை சிகிச்சை
செய்துள்ளார். சிகிச்சைக்குப் பின் உதடுகள் வீங்கி முகம் வித்தியாசமாக மாறியுள்ளது. மக்கள் அவரை ஜாம்பி, டெவில் என தற்போது அழைக்கின்றனர். அவரது முகம் எப்படி உள்ளது என நீங்களே கூறுங்கள்.
Similar News
News January 19, 2026
கூட்டணி விவகாரத்தில் விஜய் ஏமாற்றம்!

ஆட்சியில் பங்கு என அறிவித்தபிறகும் விஜய்யுடன் தற்போது வரை ஒரு கட்சி கூட கூட்டணி அமைக்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகள் சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக அதிமுக, பாஜகவிலிருந்து வந்த சிலர் மீண்டும் தங்களது தாய் கழகத்திற்கே திரும்பலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெகவுடன் இணைவார் எனக் கூறப்பட்ட <<18891552>>TTV தினகரன்<<>>, NDA-வில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளாராம்.
News January 19, 2026
காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்

TN காங்கிரஸில் அதிரடி மாற்றம் செய்து தேசிய தலைமை அறிவித்துள்ளது. உட்கட்சி பூசல், கூட்டணி விவகாரம், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலத் தலைமையின் உத்தரவையும் மீறிப் பல நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் கார்கே, ராகுல் உள்ளிட்டோரின் ஆலோசனைக்கு பிறகு 71 மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் காங்கிரஸுக்கு ‘கை’ கொடுக்குமா?
News January 19, 2026
நாளை TN சட்டப்பேரவை: கவர்னர் உரையாற்றுவாரா?

ஆண்டுதோறும் சட்டப்பேரவை முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. 2021-ல் RN ரவி பொறுப்பேற்ற பிறகு 2022-ல் மட்டுமே உரையை முழுமையாக வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடப்படவில்லை என உரையை வாசிக்காமலே வெளியேறினார். இந்நிலையில், நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்திலாவது உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


