News August 4, 2025
சிராஜின் சீக்ரெட்… உன்னை நம்பு!

சிராஜின் அசத்தல் பவுலிங் தான் இன்று டீம் இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கியது. அதுபற்றி சிராஜ் சொல்வதை கேளுங்கள். ‘இன்று காலை வழக்கத்தைவிட 2 மணிநேரம் முன்பே எழுந்துவிட்டேன். பின், என் போனில் ‘BELIEVE’ என்ற வாசகம் கொண்ட ரொனால்டோவின் வால்பேப்பரை வைத்தேன். ‘என் நாட்டுக்காக நான் இதை செய்துமுடிப்பேன்’ என்று அப்போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்’ என்றார். BELIEVE YOURSELF!
Similar News
News August 5, 2025
இன்று எந்த திடீர் அறிவிப்பும் வராது: உமர் உறுதி

ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற யூகங்களை J&K CM உமர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஆனால் வரும் காலங்களில் அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். J&K யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைமுன்னிட்டு PM மோடி, அமித்ஷா இருவரும் நேற்று ஜனாதிபதியை சந்தித்ததால் மேற்கூறிய யூகங்கள் பரவியது.
News August 5, 2025
டிரம்ப் மிரட்டல்.. இந்தியா கண்டனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினால் இன்னும் அதிகம் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், அமெரிக்கா ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தேச நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News August 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.