News September 15, 2025

சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சிராஜ்

image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் முகமது சிராஜ் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், முகமது சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் இந்தியா தொடரை டிரா செய்ய முடிந்தது. சிறந்த வீரராக அவர் தேர்வாக இதுவே முக்கிய காரணம். அதேபோல் மகளிரில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் விருதை பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டராக ஓர்லா அசத்தியிருந்தார்.

Similar News

News September 15, 2025

சுவிஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன்

image

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழகத்தின் வைஷாலி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகளை பெற்று வைஷாலி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் 2026 உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

News September 15, 2025

EPS 4-வது இடத்துக்கு செல்வார்: புகழேந்தி

image

தொகுதிவாரியாக விஜய் செல்லும்போது EPS, 4-வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார், அண்ணா, MGR, ஜெ., வழியில் வந்த ADMK தொண்டர்கள், RSS கொள்கை (அ) BJP-ஐ பின்பற்ற தயாராக இல்லை என கூறியுள்ளார். எனவே, BJP-க்கும் ADMK தொண்டர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

உலகின் சுவையான உணவுகள்

image

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு சுவையானதாக கருதப்படுகிறது. ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களின் சுவையான உணவுகள் மேலே புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. அதை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்கள். அதில், நீங்கள் ருசித்த உணவு ஏதேனும் இருந்தால் அல்லது நீங்கள் ருசிக்க விரும்பும் உணவின் பெயரை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!