News August 5, 2025
டேல் ஸ்டெயின் கேட்டதை கொடுத்த சிராஜ்

கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுப்பார் என டேல் ஸ்டெயின் கணித்திருந்தார். 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை மட்டுமே சிராஜ் எடுத்தார். ஆனால், 2-வது இன்னிங்சில் அசாத்தியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். வெற்றிக்கு பின் நீங்கள் கேட்டதை கொடுத்துட்டேன் என டேல் ஸ்டெயினுக்கு, X பக்கத்தில் சிராஜ் பதில் அளித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
வெள்ள சர்க்கரை என்றால் கொள்ள ஆசையா?

டீ, காபி என்றாலே வெள்ளை சர்க்கரையை கொஞ்சம் தூக்கலாக போட்டு கொள்ளும் பழக்கம் உள்ளவரா? வெள்ளை சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கானது. உடல் எடையை அதிகரிப்பதுடன், வெள்ளை சர்க்கரை இதயத்தையும் அதிகமாக பாதிக்கிறது. இவற்றுடன் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகம். அடுத்தமுறை, ஒரு ஸ்பூன் தானே என சேர்க்கும் போது யோசிக்கவும்.
News August 5, 2025
விஜய்யின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறி தேதியை மாற்ற போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து மாநாட்டை வரும் 18 முதல் 22-ம் தேதிக்குள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநாட்டுக்கான தேதியை இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார்.
News August 5, 2025
வடமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாற முடியுமா

வடமாநிலத்தவர்கள் அரசின் நலத்திட்டங்களையும் அனுபவிக்கின்றனர். குறிப்பாக, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்கள் பிடித்துபோய் அவர்கள் இங்கேயே தங்க விரும்பி, வாக்காளர்களாகவும் மாற விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்திய குடிமகன் நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க, பணிபுரிய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. ஆனால், இது திட்டமிட்டு நடப்பதாக குற்றம் சாட்டினால், அதை நிரூபிக்க வேண்டும்.