News December 11, 2025
SIR வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்

SIR-க்கு எதிரான வழக்குகளில், இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் இறுதியில் வழங்கப்படும் என SC தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியின் வழக்குகள் உள்பட பிரதான வழக்குகளின் விசாரணை வரும் 17, 18-ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த வழக்கும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகள் SC தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரிக்கப்பட உள்ளன.
Similar News
News March 6, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது HINT

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்தல் தேதி குறித்து பாஜகவின் பி.எல்.சந்தோஷ் HINT கொடுத்துள்ளார். சென்னையில் பாஜக வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘தமிழகத்தில் ஏப்.15-க்கு பிறகு தொண்டர்கள் மற்ற வேலைகளை பார்க்கலாம்; அதுவரை தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும்’ என தேர்தல் தேதி பற்றி சூசகமாக தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
இது தெரியாம Wafers சாப்பிடுறீங்களா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் Wafer biscuit-களை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், அது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் அந்த biscuit-ல் வெறும் சர்க்கரையும், கெட்ட கொழுப்பும் தான் உள்ளதாம். இதனால் உடல் பருமன், இதய பிரச்னை போன்ற பல பாதிப்புகள் வரலாம் எனவும் எச்சரிக்கின்றனர். எனவே, குழந்தைகள் ஆசையுடன் கேட்கிறார்கள் என்பதற்காக இதையெல்லாம் வாங்கித் தராதீர்.
News March 6, 2026
அதிமுகவில் இணைந்தார்.. உடனே முக்கிய பதவி

அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் இணைந்ததால் OPS மீது அதிருப்தியில் இருந்த அவர், மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், வெல்லமண்டி நடராஜனை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமித்து EPS அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன், OPS உடன் சேர்ந்து திமுகவில் இணைவார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.


