News January 18, 2026
SIR-ல் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி பெயரே மிஸ்ஸிங்!

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் விடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் அவர் பெங்களூருவில் இருந்ததால் அவர் பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் சேர்ப்பு முகாமில் தனக்கும், தனது மனைவி & மகனுக்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவர் விண்ணப்பித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
ரொம்ப நேரம் Scroll பண்ணி, ரீல்ஸ் பாத்துட்டே இருக்கீங்களா..

பல மணி நேரம் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது, மூளைக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என சீனாவின் Tianjin Normal University கண்டறிந்துள்ளது. இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது அதிகமாக டோபமைன் சுரப்பதால், போதைக்கு அடிமையாவதற்கு இணையான ஒரு நிலையை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், செய்யும் வேலையில் கவனம் குறைவது, ஞாபக சக்தி பிரச்னை போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
News February 5, 2026
மும்பை டிராபிக் ஜாம்.. ஹெலிகாப்டரில் பறந்த நபர்!

எரிவாயு லாரி கவிழ்ந்ததால், மும்பை – புனே நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 20-22 கி.மீ வரை வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில், இதிலிருந்து தப்பிக்க, தொழிலதிபர் சுதிர் மெஹ்தா ஹெலிகாப்டரில் பறந்துள்ளார். வானில் இருந்து டிராபிக் ஜாமின் போட்டோக்களை பதிவிட்ட அவர், இது போன்ற பாதிப்பில் இருந்து தப்ப, நெடுஞ்சாலைகளில் Emergency Exit-களை வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
News February 5, 2026
லோக்சபாவில் 22 ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவம்

PM உரை இல்லாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பேச விடவில்லை என கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரை இல்லாமல் சபை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் சபை தொடங்கியவுடன் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரையின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2004-ல் PM மன்மோகன் சிங்கை பாஜக நன்றி உரை தெரிவிக்கவிடாமல் செய்தது.


