News December 14, 2025

SIR படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசிநாள்

image

TN முழுவதும் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், வாக்குச்சாவடிகளில் BLO-க்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளனர். அதில், தங்களது படிவங்களை மறக்காமல் ஒப்படைத்துவிடுங்கள். இல்லை எனில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

Similar News

News December 18, 2025

5,000 அரசுப்பள்ளிகளில் பூஜ்ஜியம் மாணவர்கள்

image

10-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி கார்த்தி சிதம்பரம் MP எழுப்பிய கேள்விக்கு, நாட்டில் உள்ள 10.13 லட்சம் அரசுப்பள்ளிகளில் சுமார் 5,149 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது. இதில் 70%-க்கும் அதிகமான பள்ளிகள் தெலங்கானா, மேற்கு வங்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

News December 18, 2025

ஈரோட்டில் ‘விஜய் பரிதாபங்கள்’ போஸ்டர்கள்

image

<<18599840>>பரப்புரைக்காக<<>> விஜய் ஈரோட்டில் காலெடுத்து வைக்கும் முன்பே, மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சில போஸ்டர்கள் SM-ல் புயலை கிளப்பியுள்ளன. ‘ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?’, ‘கரூருக்கு போகல, ஆனா ஆடியோ launch-க்கு மலேசியா போறீங்க’, ‘விஜய் பரிதாபங்கள்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதற்கு விஜய் பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News December 18, 2025

ஜன.5-ல் அமமுக பொதுக்குழு

image

தஞ்சாவூரில் ஜன.5-ல் அமமுக செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று டிடிவி அறிவித்துள்ளார். C.கோபால் தலைமையில் நடைபெறவிருக்கும் இப்பொதுக்குழுவில் அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இப்பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

error: Content is protected !!