News November 27, 2025
SIR படிவத்தில் உள்ள சிக்கலுக்கு ECI விளக்கம்

SIR படிவத்தில் உறவினர்கள் பெயர் கட்டாயமில்லை என TN தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய இயலாவிட்டால், பிற விவரங்களை நிரப்பினால் போதும் என்றும் கூறியுள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழியை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Similar News
News November 28, 2025
நயினார் இப்படி பேசலாமா?

TN அரசியலில் நயினார் பேசிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. ஓட்டுக்கு காசு கொடுப்பது கொடுங் குற்றம் என பல அரசியல் கட்சிகள் கூறி வரும் நிலையில், பொங்கலுக்கு ₹5,000 கொடுத்தால்தான் <<18410978>>மக்கள் ஓட்டுபோடுவாங்க<<>> என்பது போல நயினார் பேசியுள்ளார். மக்களுக்கு பணம் கொடுத்து திமுக வாக்குகளை வாங்குவதாக நயினாரே பலமுறை குற்றஞ்சாட்டியிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது மாற்றி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
News November 28, 2025
செங்கோட்டையன் சென்ற விமானத்தில் கோளாறு.. பதற்றம்

சென்னையில் இருந்து செங்கோட்டையன் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவைக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென சிக்னல் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட உள்ளது.
News November 28, 2025
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. ஸ்டாலின் அறிவிப்பு

டிட்வா புயலையொட்டி, முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய அவர், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF மற்றும் 12 NDRF படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


