News December 1, 2025

SIR கால நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: DMK எம்.பி.

image

SIR படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். SIR பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருப்பதாக கூறிய அவர், இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே கட்சி திமுக தான் என்று குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

அமித்ஷா வருகைக்காக காத்திருக்கிறாரா ஓபிஎஸ்?

image

டிச.15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என EPS-ஐ எச்சரித்திருந்த ஓபிஎஸ், NDA கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வார இறுதியில் சென்னை வரவிருக்கும் அமித்ஷா, தங்கள் தரப்பை அழைத்து பேசுவார் என OPS எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். ஒருவேளை பேசவில்லை என்றால், விஜய் பக்கம் செல்வது குறித்து டிச.15-ல் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

News December 1, 2025

இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் நிறுவனங்கள்!

image

வளர்ந்து வரும் பொருளாதாரம், குறைந்த கட்டுமான செலவு, அலுவலகங்களின் வாடகை உயர்வால் ஜப்பானின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. ஜப்பானில் ரியல் எஸ்டேட்டில் 2-4% மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் 6-7% வரை லாபம் ஈட்ட முடியும். எனவே, மிட்சுய் ஃபுடோசன், சுமிடோமோ ரியால்டி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் சுமார் ₹60,000 கோடி அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

News December 1, 2025

எங்கு சென்றாலும் இந்தியாவை மறக்காதீங்க: CPR

image

அடுத்த கூகுள், டெஸ்லா நமது நாட்டில் உருவாக வேண்டும் என VP CPR கூறியுள்ளார். ஹரியானாவின் குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், PM மோடி கொண்டுவந்த தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் & நாகரிகத்தில் வேரூன்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார். மேலும், இளைஞர்கள் எங்கு சென்றாலும், இந்தியா எப்போதும் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!