News November 1, 2025
SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

‘SIR’ என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடுகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அந்த SIR-ஐ இதுவரை CM ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை என்றும் சாடினார். 2016 – RK நகர் இடைத்தேர்தலின்போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர் என்று சுட்டிக்காட்டிய நயினார், இன்று SIR-ஐ அவர்களே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 1, 2025
BREAKING: நவ.18 தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். திருச்சியில் நடைபெற்ற அந்த அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் வேலை நிறுத்தம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவ.18 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆசிரியர் உள்ளிட்ட அரசுப் பணிகள் முடங்கும் சூழல் எழுந்துள்ளது.
News November 1, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

வங்கக் கடலில் நாளை(நவ.2) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என IMD கணித்துள்ளது. இது புயலாக மாறுமா என பின்னர் அறிவிக்கப்படும். காற்றழுத்தம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவ.7 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயலால் தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
உங்களுக்கு இப்படி போன் வருதா.. மாட்டிக்காதீங்க!

4G சிம்-ஐ 5G e-SIM-ஆக அப்டேட் செய்ய சொல்லி Call வந்தால், கொஞ்சம் கவனமாக இருங்கள். அது மோசடி அழைப்பாக இருக்கலாம். மும்பையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு இப்படி போன் கால் செய்து, அவரின் அக்கவுண்டில் இருந்த ₹11 லட்சத்தை ஒரு கும்பல் அபேஸ் செய்துள்ளது. சிம் கார்டு முடக்கப்பட்டு விடும் என ஏமாற்றி, OTP-யை பெற்று பணத்தை திருடியுள்ளனர். உங்களுக்கும் இப்படியான அழைப்புகள் வரலாம். யாருடனும் OTP-யை பகிராதீங்க!


