News March 14, 2025
9 இடங்களில் சிப்காட்.. 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

சிட்கோ மூலம் 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் – திருமுடிவாக்கம், மதுரை கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் – சாரம், கரூர் – நாகம்பள்ளி, தஞ்சை – நடுவூர், திருச்சி – சூரியூர், நெல்லை – நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் – தனிச்சியம் ஆகிய இடங்களில் இந்த SIPCOT-கள் அமையவுள்ளன.
Similar News
News April 3, 2026
தனி ஆளாக பரப்புரை செய்யும் தவெக வேட்பாளர்

திருத்தணி தவெக வேட்பாளரான வழக்கறிஞர் சத்திய குமார் தனி ஆளாக பரப்புரை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை வேட்பாளராக அறிவித்ததற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்திய நிலையில், இன்று ஒருவர் கூட பரப்புரை செய்ய வரவில்லையாம். சொந்த கட்சி நிர்வாகிகளே புறக்கணித்த நிலையில், தனி ஒருவராக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்துள்ளது. இன்று காலையில் 1 அவுன்ஸ் தங்கம் $103 வரை அதிகரித்த நிலையில், தற்போது $23 என குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்னதாக, இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்தது.
News April 3, 2026
‘இன்று சஞ்சு பெரிய இன்னிங்ஸை விளையாடுவார்..’

சேப்பாக்கத்தில் நடைபெறும் PBKS-க்கு எதிரான மேட்ச்சில், சஞ்சு அதிரடியான இன்னிங்ஸை விளையாடுவார் என Ex வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். முதல் 4, 5 பந்துகளை எதிர்கொண்ட பிறகு சஞ்சு விஸ்வரூபத்தை காட்டுவார் எனவும் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். PBKS-க்கு எதிரான இன்றைய போட்டியில் சஞ்சு அடித்து நொறுக்குவார் எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார். முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு இன்று அதிரடி காட்டுவாரா?


