News February 24, 2025
ஒற்றைத் தலைமையே தொடர் தோல்விக்கு காரணம்: OPS

அதிமுகவின் தொடர் தோல்விக்கு ஒற்றைத் தலைமையே காரணம் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதாக இபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடியுள்ளார்.
Similar News
News February 24, 2025
ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

ஜெயலலிதா சிலைக்கு TN அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திமுக ஆட்சியில், எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் பிறந்தநாளுக்கு அரசு மரியாதை செலுத்துவது நாகரீக அரசியல் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News February 24, 2025
சம்மர் சீசனில் AC பில் குறைக்க சூப்பர் வழி!

சம்மர் சீசன் நெருங்கி விட்டது. இனி வீடுகளில் ஏ.சி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனா, EB பில் பத்தி யோசிச்சா தான் பயமா இருக்கா? உங்களுக்கான டிப்ஸ்: தூங்கும் போது, ACல் டைமர் செட் பண்ணிட்டு தூங்குங்க. தூக்கத்தில் இருந்து எழுந்து அணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை *ACயை ஆன் செய்து அடிக்கடி ரூம் கதவு, ஜன்னலை திறக்க வேண்டாம். வெளியில் இருந்து வெப்பம் வருவதால், கூலிங்காக அதிக டைம் எடுக்கும். SHARE IT.
News February 24, 2025
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை.. பாதுகாப்பு கேட்ட EPS

தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.