News February 27, 2025

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

image

பிரபல பாடகர் K.J.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் ஆவார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News February 27, 2025

2 நாளில் சவரனுக்கு ₹520 குறைந்த தங்கம்

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றத்திலிருந்த தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த 25ஆம் தேதி ₹64,600க்கு விற்பனையானது. நேற்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இன்று (பிப்.27) ₹320 குறைந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இந்த வாரத்தில் கிராமுக்கு ₹3 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2025

‘தனுஷ் 51’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News February 27, 2025

அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் ஹாஸ்பிடலில் அனுமதி

image

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த அமைச்சரான அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனை எனக் கூறப்பட்டாலும், திமுக தலைவர்கள் பலரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!