News July 2, 2024
ஓபிஎஸ் உருக்கமாக இரங்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன் என ஓபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காக பாடுபட்ட சம்பந்தனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
Similar News
News November 18, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு… புதிய உச்சம்

முட்டை கொள்முதல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டையின் கொள்முதல் விலை ₹6.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹7 – ₹8 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
News November 18, 2025
இந்த நாடுகளுக்கு டாலர் எல்லாம் ஜூஜூபி

உலகில் அமெரிக்க டாலரை விட உயர்ந்த மதிப்பில் சில நாணயங்கள் இருக்கின்றன. அவை, பெரும்பாலும் குறைந்த பணவீக்கம், மற்றும் வலுவான நிதிக் கொள்கைகள் ஆகியவற்றின் காரணமாக உயர்ந்த மதிப்பைத் தக்க வைத்துள்ளன. அந்த நாயணங்கள் என்னென்ன, எந்த நாட்டைச் சேர்ந்தவை, எவ்வளவு மதிப்பு கொண்டவை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 18, 2025
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை: CMRL

<<18322312>>கோவை, மதுரை மெட்ரோ<<>> ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL ) தெரிவித்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் குறித்து TN அரசிடம் கூடுதல் ஆவணங்களுடன் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இதனால், தமிழக அரசு மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


