News March 18, 2024
ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கு நன்கொடை

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Similar News
News December 19, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

கடந்த 3 நாள்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(டிச.19) பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹12,380-க்கும், சவரனுக்கு ₹480 குறைந்து ₹99,040-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருவதன் எதிரொலியால் இந்திய சந்தையில் இன்று தங்கம் <<18609114>>விலை கணிசமாக குறையும்<<>> என ஏற்கெனவே WAY2NEWS செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 19, 2025
அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு!

வ்ஃப்ஃப்க்ஃப்ர் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் திட்டமிட்டபடி ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.


